மாவீர‌ன் முத்துக்குமாருக்கு 3ம் ஆண்டு நினைவுஞ்ச‌லி…

முத்துக்குமாரா

மண்ணின் மைந்தா

த‌மிழ‌க‌ம்
உண‌ர்வால்
ப‌ற்றி எரியுமென்று
உன் உட‌லை
ப‌ற்ற‌வைத்துக்கொண்டாய்
ப‌ற்றி எரிந்த‌து
த‌மிழ‌க‌ம் ஆனால்
அட‌க்கு முறையால்
அல்லவா
அணைக்க‌ப்ப‌ட்ட‌து…

காந்தியின்
தேச‌ம் காக்குமென்றும்
புத்த‌னின் பூமி
பார்க்குமென்றும்
எந்த‌ ந‌ம்பிக்கையில்
உன்னை
பொசுக்கிக்கொண்டாய்…

ஒன்றைப் புரிந்துக்கொள்
உன் ம‌ர‌ண‌சாச‌ன‌ம்
படித்து
ம‌ர‌ணித்துக்கொண்டிருக்கும்
தேச‌த்தில் தான்
நாங்க‌ள்
ந‌டைபிண‌ங்க‌ளாய்
வாழுகின்றோம்
நாட்டை இழ‌ந்த‌வ‌ர்க‌ளை
பார்க்க‌முடியாம‌ல்
முள்வேலிக்குள்ள‌வ‌ர்க‌ளை
மீட்க‌முடியாம‌ல்….

மூன்று ஆண்டுக‌ள்
முடிந்தும் கூட‌
முள்வேலி
அறுப‌ட‌வில்லை..

க‌ற்புக‌ள்
காக்க‌ப‌ட‌வில்லை..
இன‌ப்ப‌டுகொலை
த‌டுக்க‌ப்ப‌ட‌வில்லை
அதை கேக்க‌
த‌மிழ‌க‌த்தில்
நாதி கூட‌யில்லை…..

ஆனால்
நாங்க‌ளோ
வெக்க‌மே இல்லாம‌ல்
உன் நினைவு நாளென்று
கூட்ட‌த்தைக் கூட்டி
எங்க‌ளை
உண‌ர்வாள‌ர்க‌ளாக‌வே
காட்டிக்கொண்டு
நாட்க‌ளே
க‌ட‌த்த‌வே
ஆசைப்ப‌டுகின்றோம்…

என்ன‌ப்ப‌ண்ணுவ‌து
இய‌லாத‌ தேச‌த்தில்
உண‌ர்வாள‌ர்க‌ளால்?
இதுவே
செய்ய‌ முடிகிற‌து…..

ப‌ர‌ம‌க்குடி க‌ல‌வ‌ர‌மும்‍ ம‌னிதாபிமான‌மும்

மூன்று உயிர்களை காக்க நாம் உணர்வு பூர்வமான போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் தமிழக அரசின் காவல் துறையால் மிக கொடுரமாக சுட்டுக்கொல்லப்பட்ட எட்டு அப்பாவிகளின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் அல்லது கண்டுக்கொள்ளாமல் நாம் இருப்பதும், ஓட்டுக்காக அரசியல் நடத்தும் அரசியல் வாதிகள் ஒரு கண்டன அறிக்கையை முதல்வரின் கோபத்திற்கு ஆளாகத வண்ணம் தந்துவிட்டு அமைதியாக இருந்து விடுவதும் எந்த வகையில் நியாயம் என்று நமக்கு  புரியவில்லை. அரசின் இது போன்ற கண்முடித்தனமான, கொடுரமான செயல்களால் பாதிக்கப்பட்டவர்களை சாதி  ரீதியாகத்தான் தவிர மனிதாபிமானத்துடன் பார்ப்பது கிடையாது. நாம் என்று மனிதாபிமானத்துடன் பார்க்கின்றோமோ அன்றே இது போன்ற வான் செயல்களுக்கு ஒரு முடிவு ஏற்பட்டுவிடும்  ஆனால் நாம் ஒருபோதும் அப்படி இருப்பதும் இல்லை பார்ப்பதும் இல்லை.

11-09-2011 அன்று பரமக்குடியில் ஏற்பட்ட கலவரம், காவல்துறையின் துப்பாக்கி சூடு போன்றவையும் நாம் அப்படித்தான் பார்க்கின்றோம். அனால் அதன் அடிப்படை தன்மையை நாம் பார்ப்பதும் கிடையாது புரிந்துக்கொள்ள முயற்சிப்பதும் கிடையாது. அந்த துப்பாக்கி சூடு நடந்ததற்கு அடிப்படை காரணம் மற்றும் முதன்மையாக நாம் கருதுவது தமிழக காவல் துரையின் மெத்தன போக்கும்,  ஒரு சமுதாய மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நடத்தும் ஒரு குருபூஜையில் அந்த சமுதாய மக்களின் தலைவரை வரக்கூடாது என்று  தடை போட்டதும் ஆகும். இதில் நாம் ஒன்றை கூர்ந்து கவனிக்க வேண்டும் திரு ஜான்பாண்டியன் அவர்கள் பலவருட சிறைவாசத்திற்கு பின்பு தற்போது தான் வெளியை வந்துள்ளார்.  அதனால்,  தான் இழந்து போன அரசியல் செல்வாக்கை அல்லது மக்களிடம் நெருங்கி உறவாட முடியாத அந்த நாட்களை இந்த குருபூஜை மூலம் செய்து விடலாம் என்றும், இந்த குருபூஜைக்காக பல லெட்சம் ரூபாய் செலவு செய்து வருகின்றார் என்றும் முன்பே உளவுத்துறை அறிக்கை தந்துள்ளதாக தெரிகிறது. அப்படி பொருள் செலவு செய்து ஏற்பாடு செய்யப்பட நிகழ்ச்சியில் அவர் கலந்துக்கொள்ள வரும் போது வரக்கூடாது என்பது உண்மையில் அவர் சார்ந்த அந்த ச‌மூக‌ மக்களுக்கு கோபம் ஏற்படுவது என்பது நியாயமே.

அனால் இதில் காவல் துறை மற்றும் தமிழக அரசு தங்கள் கடைமையை சரியாக செய்யவில்லையா  அல்லது இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்ததா என்று புரியவில்லை. நியாயமாக காவல் துறை என்ன செய்து இருக்க வேண்டும். இதே அதிமுக மற்றும் திமுக அரசுகள் தேவர் குருபுஜையியை நடத்தும் போது செய்யும் முன் ஏற்பாடுகளை தியாகி இம்மானுவேல் ராஜசேகரன் குருபுஜையின் போதும்  கடைபிடித்திருக்க வேண்டும்.  அது என்னவென்றால் ஜான்பாண்டியன் வருவதால் எங்கு பதட்டம் ஏற்படுமோ அல்லது எதிர்ப்பு இருக்குமோ அந்த பகுதியெல்லாம் காவல் துறையை கொண்டு பலப்படுத்தி பாதுகாப்பு அளித்து ஜான்பாண்டியன் வந்து செல்லும் வரை பாதுகாப்பு செய்து இருக்க முடியும் அனால் அப்படி செய்யவில்லை. அனால் தேவர் குருபுஜையின் போது இரு அரசுகளும் பிரச்சனைக்குரிய பகுதிகளிலெல்லாம் பாதுகாப்பை பலப்படுத்த செய்து அந்த தேவர் சமூக தலைவர்கள் அனைவரும் வந்து அஞ்சலி செலுத்த வழி செய்கிறதே தவிர எந்த தலைவருக்கும் இதுவரை தடை செய்து வரக்கூடாது என்று சொல்லவில்லை,  ஏன் திமுக ஆட்சியில் கூட இன்னல் முதல்வர் ஜெயலலிதா சென்று வர ஏற்பட்ட கலவரத்தில் கூட காவல் துறை தான் அடிப்பட்டதே தவிர பொதுமக்களை போலீஸ் அடிக்கவில்லை.

நிலைமை கட்டுக்கு மீறி சென்றுவிட்டதால் துப்பாக்கி சூடு நடத்தி பொருட்களுக்கு சேதம் வராமல் தடுக்கவேண்டி இருந்தது என்று துப்பாக்கி சூடு நடத்திய திரு செந்தில் வேலன் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பொருட்களுக்கு சேதாரம் வராமல் இருக்க வேண்டும் எனற எண்ணம் இருந்த உங்களுக்கு உயிர்களுக்கு சேதம் வரகூடாது என்ற மனிதாபிமானம் இல்லாமல் போனது ஏனோ ? அல்லது சாகடிக்கப்பட்டவன் ஏழை அப்பாவி கேக்க நாதியில்லாதவான் என்ற கருத்தா?  ஏன் என்றால் யார் கேப்பது  ஜான்பண்டியனுக்கும், கிருஷ்ணசாமிக்கும் இதில் தானே பிரச்சனையே.

அடையாறு பகுதி சரக டி ஐ ஜி யாக இருந்த செந்தில் வேலணை சட்ட ஒழுங்கையும், உயிர்களையும் பாதுகாக்க  தானே அரசு அங்கு சிறப்பு அதிகாரியாக அனுப்பி இருக்க முடியும். ஆனால் அவர் தன கடைமையை சரியாக செய்தாரா. காவல் துறை பயிற்சியில் கலவரம் செய்யும் அல்லது கட்டுப்பாட்டை மீறும் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்று மிக  சிறப்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க நேர்ந்தால் முதலில் கண்ணிர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும், வஜிரா வாகனம் கொண்டு தண்ணிரை பியிச்சி அடிக்கவேண்டும் அனால் இங்கு நடந்திருக்கும் நிலைமையே வேறு. கண்ணிர் புகை குண்டு, ரப்பர் குண்டு, வஜிரா வாகனம் எதுவும் பயன் படுத்தவில்லை, வஜிரா வாகனம் கலவரக்கரகளால் தீமுட்டப்பட்டது அப்படியானால் வஜிரா வாகனம் கலவரக்கர்களால் தீ மூட்டும் வரை காவல் துறை என்ன செய்தது அவர்கள் மீது தண்ணிரை பயிச்சி அடித்து விரட்டாமல்.  அல்லது வஜிரா வாகனம் இயக்கும் அளவுக்கு  தகுதி இல்லாமல் இருந்ததா என்று ஆயிரமாயிர கேள்விகள் எழுகிறது. இதையெல்ல மீறி அந்த கூட்டத்தை கலைக்க அல்லது கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தி தான் ஆகவேண்டும் என்று முடிவு செய்து விட்டால் துப்பாக்கி பிரோயகத்தை மனிதனின் முழங்காலுக்கும்  கிழே குறிவைக்காமல் மார்பு மற்றும் தலையில் குறி வைத்து சுட காரணம் என்ன? செத்தவர்கள் அனைவரும் தலையிலும் மரபிலும் சுடப்பட்டு இறந்து இருக்கிறார்கள். இங்கு நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் இதை விட மிக கொடுரமாக தொடர்ந்து பத்து நாட்கள் லண்டன் மாநகரமே பற்றி எரிந்தது அனால் ஒரு இடத்தில் கூட கலவரக்கரர்களை காவல் துறை சுடவும் இல்லை யாரும் சாகவும் இல்லை, அங்கு மனித உயிர்களுக்கு மதிப்பு இருந்தது அனால் இங்கு சாதி மனிதர்களுக்கு (ஓட்டு வங்கி வைத்து ) மதிப்பு கொடுக்கப்படுகிறது. தமிழ் நாடு மட்டுமல்ல இந்தியாவில் நடக்கும் எந்த துப்பாக்கி சூடும்  ஏழை மக்களுக்கு எதிராகவே இருக்கும் என்பது தான் இன்றைய வரை உள்ள வரலாறு இதில் பரமக்குடி மட்டும் விதிவிலக்கா என்ன?.

அதை விட கொடுமை சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உறுப்பினர்கள் பேசும் போது இது இனக்கலவரம் இல்லை என்று கூறினார்கள் இருந்தாலும் நீதி விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் முதல்வர் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டிருந்தால் ப‌ரவாயில்லை அனால் முதல்வரின் கூற்று வேறு மாதிரியாக இருந்தது.  அவரின் அறிக்கை இது தான்.

இங்கே பேசியவர்கள் சிலர் இது இனக் கலவரம் இல்லை என்றனர். இனக் கலவரம் இல்லை என்றால், எங்களுக்கும் அதில் மகிழ்ச்சி தான்.

நடந்த உண்மை என்னவென்றால், அந்த கிராமத்தில் ஒரு சுவரில் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி இழிவான சில வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து தான் இந்த மாணவர் பழனிகுமாரின் கொலை நடந்திருக்கிறது; ஜான்பாண்டியன் அங்கே படையெடுத்து புறப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து தான் இந்த கலவரங்கள் எல்லாம் நடைபெற்று இருக்கின்றன. இது தான் ஒரு பொருப்பான‌ முத‌ல்வ‌ரின் விள‌க்க‌மாக‌ இருக்கின்றன‌. சுவ‌ற்றில் தேவ‌ரைப்ப‌ற்றி த‌ர‌க்குறைவான‌ வாச‌க‌ம் எழுதியிருந்த‌தினால் ஒரு அப்பாவி 15 வ‌ய‌தே ஆன‌ சிறுவ‌னை கொலை செய்யும் அள‌வுக்கு ம‌னிதாபிமான‌ம், இல்லாத‌ மிருக‌த்த‌ன‌ ம‌ன‌ம் கொண்ட‌ ம‌க்க‌ளாக‌ இருப்ப‌து எந்த‌ வ‌கையில் நியாய‌ம் என்று தெரிய‌வில்லை. மேலும் கொலை செய்ய‌ப்ப‌ட்ட‌ சிறுவ‌னின் குடும்ப‌த்திற்கு ஆறுத‌ல் சொல்ல‌ ஜான்பாண்டிய‌ன் வ‌ந்தால் ப‌த‌ட்ட‌ம் ஏற்ப‌டும் அந்த‌ ப‌த‌ட்ட‌த்தை த‌னிக்க‌வே தடை விதிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌, கைது செய்ய‌ப்ப‌ட்ட‌தாக‌ ஒரு பொருப்ப‌ற்ற‌ ப‌திலையும் ம‌ன்ற‌த்தில் த‌ந்து இருக்கின்றார்க‌ள். சுவ‌ற்றில் எழுத‌ப்ப‌ட்ட‌ வாச‌க‌ம் தான் இந்த‌ கொலையை செய்ய‌ கார‌ண‌மாக‌ இருந்த‌து என்று ஒரு முத‌ல்வ‌ரே சொல்லுவ‌து என்ப‌து அர்த்த‌ம் அற்ற‌தாகிவிடுகிற‌து. ச‌ரி இதை ஒட்டித்தான் அந்த‌ சிறுவ‌ன் கொலை செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்றான் என்றாள் அவ‌ன் பெற்றோருக்கு ஆறுத‌ல் சொல்ல‌ அந்த‌ ச‌முதாய‌த் த‌லைவ‌ர் என்ற‌ முறையில் ஜான்பாண்டிய‌ன் அவ‌ர்க‌ளுக்கு பொருப்பு இருக்கின்ற‌து. ஆனால் அர‌சு இதை கையாண்ட‌ வித‌ம் ந‌மக்கு திருப்தியில்லை, புரிய‌வில்லை பாதுகாப்பு, பாதுகாப்பு என்ற‌ ஒரே நொண்டி சாக்கை சொல்லி 8 பேரின் உயிரை த‌மிழ‌க‌ அர‌சின் காவ‌ல் துறை எடுத்து இருக்கின்ற‌து என்ப‌து க‌ண்டிக்க‌த்த‌க்க‌து.

ஏற்க‌ன‌வே சாதித் த‌லைவ‌ர்க‌ளால், சிலைக‌ளால், ஊர் பெய‌ர்க‌ளால் த‌மிழ‌க‌ம் சின்ன‌ப்பின்ன‌மாகி தமிழிண‌ உண‌ர்வு இழ‌ந்துக் கொண்டிருக்கும் த‌ருவாயில் இது போன்று சாதி த‌லைவ‌ர்களுக்கு அந்த‌ ம‌க்க‌ளே குருபூசை ஏற்பாடு செய்வ‌து அல்ல‌து அர‌சே குருபூசை ஏற்பாடு செய்து ச‌ட்ட‌ ஒழுங்கை சீர்குலைப்ப‌து ம‌ட்டும‌ல்லாம‌ல் முத‌ல்வ‌ரே அதில் க‌ல‌ந்துக்கொள்வ‌து என்ப‌து ஆரோக்கிய‌மான‌ ச‌ன‌நாய‌க‌த்திற்கு ந‌ல்ல‌த‌ல்ல‌. த‌மிழக‌த்தில் உள்ள‌ எல்ல‌ச் சாதியிலும் ந‌ல்ல‌ த‌லைவ‌ர்க‌ள், தியாகிக‌ள் இருந்து இருக்கின்றார்க‌ள் அவ‌ர்க‌ளுக்கெல்லாம் குருபூசை என்று அந்த‌ ச‌மூக‌ ம‌க்க‌ளோ அல்ல‌து அர‌சோ ந‌ட‌த்த‌ ஆர‌ம்பித்தால் தின‌மும் ஒரு குருபூசை அத‌னால் ஏற்படும் ச‌ட்ட‌ ஒழுங்கு, ம‌க்க‌ள் சிந்தும் குருதி என்று தின‌ம் தின‌ம் த‌மிழ‌க‌ம் போர்க‌ள‌மாக‌த் தான் காட்சி அளிக்கும் இனிமேலும் அர‌சு இது போண்ற‌ வ‌ர‌லாறுத் த‌வ‌றுக‌ளை செய்யாம‌ல் எல்ல‌ குருபூசைக‌ளையும் தடை செய்து விட்டால் த‌மிழ‌க‌த்தில் சாதிக‌லவ‌ர‌த்தால் ம‌னித‌ன் இற‌க்க‌ வேண்டி வ‌ராது.  அர‌சு செய்யுமா? இதை.

- நில‌வ‌ன்

ம‌னித‌வ‌ள மேம்பாட்டுப் ப‌யிற்சியாள‌ர். திரு. தி.க‌.ச‌ந்திர‌சேக‌ர‌ன் ம‌ர‌ண‌ம்.

.

எலலோராலும் டி.கே.சி ம‌ற்றும் தி.க‌.ச‌ என்று அன்போடு அழைக்கப்ப‌டும் திருப்ப‌த்தூர்
ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டுத்துறை ப‌யிற்சி இய‌க்குன‌ர் ம‌ரியாதைக்குறிய‌ திரு தி.க‌.ச‌ந்திர‌சேக‌ர‌ன் அவ‌ர்க‌ள் இன்று மார‌டைப்பால் மர‌ண‌ம‌டைந்தார் என்ற‌ செய்தி அதிர்ச்சியையும், க‌வ‌லையும் அளிக்கிற‌து.

ச‌ன் தொலைக்காட்சியின் ஆலோச‌னை நேர‌ம் ப‌குதியின் மூல‌ம் ப‌ல‌ லெட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ளுக்கு அறிமுக‌மான‌வ‌ர்.

ச‌ன்,பொதிகை,ராஜ் தொலைக்காட்சி ம‌ட்டுமின்றி, இவ‌ரின் ஆஸ்ரோ, ம‌லேசியா போன்ற‌ நாடுக‌ளில் ஒளிப‌ர‌ப்பாகிய‌ த‌ன்ன‌மிக்கை க‌தை நிக‌ழ்ச்சிக‌ளை டிடிஎன் மூல‌ம் தொட‌ர்ந்து ஐரோப்பா, க‌ன‌டா, அஸ்திரேலியா நாடுக‌ளில் ஒளிப‌ர‌ப்பாகி சாத‌னை ப‌டைத்த‌வை.

3500 மேற்ப‌ட்ட‌ ப‌யிற்சி வ‌குப்புக‌ள் ப‌யிற்சி ப‌ட்ட‌ரைக‌ள் க‌ருத்த‌ர‌ங்க‌ம் ஆகிய‌வ‌ற்றை ந‌ட‌த்திய‌ அனுப‌வ‌ம் பெற்றவ‌ர்.

இந்தியா, இல‌ங்கை,துபாய்,ம‌லேசியா,ஜ‌ப்பான்,சிங்க‌ப்பூர்,தாய்லாந்து,புருனை,அமெரிக்கா மற்றும் குவைத் ஆகிய‌ நாடுக‌ளில் 30க்கும் மேற்ப‌ட்ட‌ நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு ப‌யிற்சி அளித்து வ‌ந்த‌வ‌ர்,

2,00,000க்கும் மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இவ‌ரின் நிக‌ழ்சியில் நேர‌டியாக‌ ப‌ங்கு பெற்று ப‌ய‌ன‌டைந்துள்ளார்க‌ள்.

இந்திய‌ ஜேசிஸ் இய‌க்க‌த்தால் இருமுறை “இந்தியாவின் த‌லைசிற‌ந்த‌ ப‌யிற்சியாள‌ர்” விருதினைப்பெறவ‌ர். இவ‌ரின் ம‌ர‌ணம் இந்திய‌ ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டுத்துறைக்கு பெரிய‌ இழ‌ப்பாகும்

இவ‌ருக்கு பாரிஜாத‌ம் என்ற‌ மனைவியும், மூன்று ம‌க‌ள்க‌ள மற்றும் ஒரு ம‌க‌னும் உள்ளன‌ர்.
2004 அன்று க‌விஞ‌ர் அறிவும‌தி அவ‌ர்க‌ளுட‌ன் இனைந்தும் அத‌ற்கு பிற‌கு த‌னித்தும் குவைத்தில் மிக‌ சிற‌ப்பான‌ ம‌னித‌ வ‌ள மேம்பாட்டு நிக‌ழ்ச்சியை இங்கு உள்ள‌ த‌மிழ‌ர்க‌ளுக்கும் ம‌ற்றும்  நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு வ‌ழ‌ங்கினார்.

மாவீர‌னின்தாயார் ஏற்பாரா ம‌ருத்துவ‌த்தை?

த‌மிழ் ம‌க்க‌ள் யாரும் ஏப்ர‌ல் 16 தேதி இரவை அவ்வ‌ளவு எளிதில் ம‌ற‌ந்து விட‌ முடியாது
முள்ளிவாய்க்கால் கொடுமை எந்த‌ அளவுக்கு த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ளுக்கு ம‌ன‌ வேத‌னையை அளித்த‌தோ அதை விட‌ எந்த‌ அள‌வுக்கும் குறைவு இல்லாம‌ல் ம‌ன‌வேத‌னையை அளித்த‌ ஒரு க‌ருப்பு நாள் அந்த‌ இர‌வு.. ஆம் த‌மிழ‌ர்க‌ள் க‌ண்ட‌ அ ந்த‌ புற‌னானூற்று வீர‌த்தை இன்று ச‌ம‌ கால‌த்தில் நிக‌ழ்த்தி காட்டிய‌ ஒரு ஒப்ப‌ற்ற‌ த‌மிழ் மாவீர‌னின் தாய‌ரை அர‌சிய‌ல் வாதிக‌ளின் சுய‌ ந‌ல‌ம் ம‌ற்றும் அதிகார‌ துஸ்பிர‌யோக‌த்தால் ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ வ‌ந்த‌ அந்த‌ புறனானூற்று தாயை விமான‌த்தில் இருந்து கீழே கூட‌ இற‌ங்க‌விடாம‌ல் ஒரு ம‌னித‌பிமான‌ ம‌ற்ற‌ முறையில் இந்திய‌ ஆளும் வ‌ர்க்க‌மும் த‌மிழ‌க‌ அர‌சும், சுய‌ ந‌ல‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் செய்த‌ அந்த‌ க‌ப‌ட‌ நாட‌க‌த்தை இன்று நினைத்தாலும் அறுவ‌ருப்பாக‌ உள்ள‌து.

சுய‌ நினைவை அடிக்க‌டி இழந்து விடும் அந்த‌ தாய்க்கு ஒன்று ம‌ட்டும் நினைவில் இருந்து இருக்கும் தான் ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ செல்வ‌து த‌மிழ் நாடு என்றும் த‌மிழ் உற‌வுக‌ள் வாழும் த‌ன் குடும்ப‌ம் என்று நினைத்து இருக்கும் அந்த‌ தாயுள்ள‌ம். ஆனால் அத‌ற்கு எந்த‌ அருக‌தையும் அற்ற‌வ‌ர்க‌ள் நாம் என்ப‌தை அன்று இர‌வை அந்த‌ தாய்க்கு உண‌ர்த்திவிட்டார்க‌ள் ந‌ம் அர‌சிய‌ல்வாதிக‌ள்.

இர‌வு 12 ம‌ணிக்கு என‌க்கு செய்தி தெரிந்து விமான‌ நிலைய‌த்திற்கு தொட‌ர்பு கொண்ட‌போது அந்த‌ விமான‌ம் அந்த அம்மையாருட‌ன் ம‌லேசியா சென்றுவிட்ட‌தாக‌ ஒரு அறிக்கையும், பிற‌கு அப்ப‌டி ஒரு ச‌ம்பவ‌ம் ந‌ட‌ ந்த‌தே ம‌று நாள் காலை செய்தி தாளை பார்த்து தான் தெரி ந்து கொண்ட‌தாக‌வும் மாரி மாரி செய்தி த‌ந்து த‌மிழ‌ர்க‌ளை முட்டாள‌க்கினார், த‌மிழ‌ர்க‌ளை முட்டாளாக‌வே வைத்து கொண்டு இருக்கும் ந‌ம‌து முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ள். அவ‌ருக்கு வ‌க்கால‌த்து வாங்கும் சுப‌வீ, திருமா, வீர‌ம‌ணி போன்ற‌வ‌ர்க‌ள் இதை செய்த‌து க‌லைஞ‌ர் இல்லை முந்தைய‌ ஜெயா ஆட்சியில் அவ‌ர்க‌ள் ம‌த்திய‌ அரசுக்கு க‌டித‌ம் எழுதிய‌ விளைவால் தான் அந்த‌ தாயால் த‌மிழ‌ர்க‌ள் உண‌ர்வ‌ற்று வாழும் இ ந்த‌ காட்டுக்கு வ‌ர‌முடிய‌வில்லை என்று அறிக்கைக‌ளை அள்ளி வீசினார்க‌ள். இதில் சுப‌வீ ரொம்ப‌ கோப‌ப‌ட்டு இப்ப‌ தான் எங்களை ஞாப‌க‌ம் வ‌ருகிறதா என்று ஒரு வெளி நாட்டில் இருந்து உத‌விக்கு கேட்ட‌வ‌ரிட‌ம் தெரிவித்த‌தாக‌ பெருமையாக‌ எழுதுகிறார் இதை எல்லாம் பார்க்கும் போதும் கேக்கும் போது அசிங்க‌மாக‌ அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு இருக்குமே என்ற‌ எண்ண‌ம் துளியும் இவ‌ர்க‌ளுக்கு இல்லாதது தான் கேவ‌ளாமாக‌ இருக்கின்ற‌து.

ப‌ழ‌. நெடுமாற‌ன், வைகோ செய்த‌து த‌வ‌று என்று ஒரு த‌ர‌ப்பில் பேச‌ப‌டுகின்ற‌து. இதில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள‌வேண்டும் அந்த‌ தாய‌ருக்கு ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் த‌மிழ‌க‌த்தில் யாருக்கு வ‌ரும் ப‌ழ‌ நெடுமாற‌ன், கொள‌த்தூர் ம‌ணி, ம‌ணியர‌ச‌ன், வைகோ, சீமான், தியாகு போன்றா உண‌ர்வாள‌ர்க‌ளுக்கு தான் வ‌ரும் சுப‌வீ, திருமா அல்ல‌து வீர‌ம‌ணிக்கோ வ‌ருமா?
க‌லைஞ‌ருக்கு முன்னால்.
 
ப‌ழ‌ நெடுமாற‌ன், கொள‌த்தூர் ம‌ணி, ம‌ணியர‌ச‌ன், வைகோ, சீமான் இவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் அந்த‌ தாயை அழைத்து வ‌ர‌ க‌லைஞ‌ரிட‌ம் செல்ல‌ முடியுமா? அத‌னால் தான் அவ‌ர்க‌ள் ம‌லேசிய‌வில் உள்ள‌ தூத‌ர‌க‌த்தில் விசா பெற‌ விண்ண‌ப்ப‌ம் செய்து பெற்று இருப்பார்க‌ள்.

ந‌ம்முடைய‌ கேள்வி இது தான் இந்தியாவில் நுழைய‌ அந்த‌ தாய்க்கு தடை இருக்கும் போது எப்படி விசா வ‌ழ‌ங்கிய‌து. அந்த‌ தாய் விமான‌த்தில் புற‌ப்ப‌ட்ட‌ பிற‌கு தான் தூதர‌க‌ம் விழித்துக் கொண்டு த‌வ‌றாக‌ வ‌ழங்கிவிட்டோம் அவ‌ர்க‌ளை அனும‌திக்க‌ வேண்டாம் என்று சென்னை விமான‌ நிலைய‌த்திற்கு த‌க‌வ‌ல் கொடுத்த‌தா, விமான‌ நிலைய‌ம் மூல‌ம் இந்த‌ செய்தி அர‌சுக்கு தெரிந்து தான் நெடுமாற‌ன்,வைகோ செல்வ‌த‌ற்கு முன்பே ந‌ம‌து காவ‌ல் துறை அங்கு சென்ற‌தா? என்று ப‌ல‌ கேள்விக‌ள் ந‌ம‌க்கு எழுகின்ற‌ன்.

அந்த‌ தாய் திருப்பி அனுப்ப‌ப‌ட்ட‌தற்கு ச‌ட்ட‌ ம‌ன்ற‌த்தில் விவாத‌ம்,  அர‌சுக்கு அந்த‌ தாய் க‌டித‌ம் அனுப்பினால் ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ ம‌த்திய‌ அர‌சுக்கு க‌டித‌ம் எழுத‌ப்ப‌டும் என்ற‌ க‌‌லைஞரின் க‌டித‌ப் போர், அந்த‌ தாயின் பெய‌ரால் சில‌ ந‌ல‌ விரும்பிக‌ள் அர‌சுக்கு க‌டித‌ம் எழுத‌.   இன்று சில‌ நிப‌ந்த‌னைக‌ளுட‌ன் ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ அனும‌தி.

இந்த‌ செய்தி அவ‌மான‌மாக‌ இல்லையா த‌மிழ் உற‌வுக‌ளே உங்க‌ளுக்கு,  அந்த‌ தாய் இந்திய‌ இறையான்மைக்கோ அல்ல‌து த‌மிழ‌க‌த்திற்கோ எதாவ‌து ப‌ங்க‌ம் விளைவித்தாரா? எந்த‌ அடிப்ப‌டையில் 7 கோடித் தமிழ‌ர்க‌ளை ந‌ம்பி ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ வ‌ன்த‌ ஒரு த‌மிழ‌ச்சியை எந்த‌ வித‌ அடிப்படை காரண‌மும் இல்லாம‌ல் இற‌ங்க கூட‌ அனும‌திக்காமல் ஒரு திவிர‌வாதியை போல் திருப்பி அனுப்பிவிட்டு இன்று சில‌ நிப‌ந்த‌னைக‌ளுட‌ன் ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ அனும‌தி என்று சொன்னால் நாம் எங்கே இருக்கின்றோம்.

அந்த‌ தாய் என்ன‌ ம‌ர‌ண‌த்திற்கு அஞ்சும்  தாயா? அவ‌ர் புறனானூற்று தாய் அல்ல‌வா?  80 வ‌ய‌தை க‌ட‌ந்த‌ ஒரு மாவிர‌னின்  தாய் அல்ல‌வா? அவ‌ருக்கு சுய‌ நினைவு ம‌ட்டும் வ‌ந்து விட்டால் ஒரு போதும் த‌மிழ் உண‌ர்வ‌ற்ற ந‌ம‌தின் ம‌ருத்துவ‌ பிச்சையை அந்த‌ புற‌னானூற்று தாய் ஏற்க‌ மாட்டார் என்ப‌து ம‌ட்டும் உண்மை.

இந்திய‌ ம‌ற்றும் த‌மிழ‌க‌த்தின் ம‌னித‌ நேய‌ம‌ற்ற‌ செய‌ல்….

இந்தியா ஒரு இறையான்மை உள்ள‌ நாடு அப்ப‌டித்தான் பாட‌ப்புத்த‌க‌த்தில் இருந்து ப‌டித்து இருக்கின்றோம். எதிரி நாடுக‌ள் ந‌ம்மை எட்டி எட்டி உதைத்தபோதும். அவ‌ர்க‌ளுட‌ன் இன‌க்க‌மாக‌வே செல்ல‌ விரும்புகின்றோம் விளைவு  செய‌லாள‌ர்க‌ள் ம‌த்தியிலும் பிர‌த‌மர்க‌ள் ம‌த்தியிளும் பேச்சுவார்த்தைக‌ளும் இன‌க்க‌மான ப‌ய‌ண‌ங்க‌ளும் ந‌ட‌ந்துவ‌ருகின்ற‌ன‌. மேலும் உல‌க‌ நாடு மெச்ச‌ வேண்டும் என‌பதால் அங்கிருந்து வ‌ரும் நோய‌ளிகளுக்கு உய‌ர் சிகிச்சையும், அதை ந‌ம் நாடே கொண்டாடுவ‌தாக ப‌ம்மாத்து காட்டியதும் ந‌ம் நினைவில் ஓடுகிற‌து. பாகிஸ்தான் சிறுவ‌னுக்கு த‌மிழ‌க‌த்தில் சிகிச்சை அளித்த‌தை யாரும் ம‌ற‌ந்துவிட‌ மாட்டார்க‌ள். நம் நாட்டில் இவ‌ர்க‌ள் தான் தீவிரவாத‌த்தை ப‌ர‌ப்புகிறார்க‌ள் என்று உல‌க‌ நாடுக‌ள் எல்லாம் சென்று சொல்லி வ‌ரும் நாட்டில் இரு ந்து எ ந்த‌ வித‌ சிக்க‌லும் இல்லாம‌ல் யாரும் வ‌ ந்துவிட்டுச் செல்ல‌முடிகின்ற‌ன‌. ஆனால்…….

இன‌த்தாலும், மொழியாலும், உண‌ர்வாளும் ஒன்றுப்ப‌ட்ட‌ தொப்புள்கொடி உற‌வுக‌‌ள் எல்லா சான்றுக‌ள் இருந்தும் த‌மிழ‌க‌த்தில் நுழைய‌முடியாத‌து. த‌மிழ‌ர்க‌ளுக்கு விட‌ப்ப‌ட்ட‌ ச‌வால்  ம‌ற்றும் இழிவுப‌டுத்தும் செய‌லாக‌வே ந‌ம் க‌ருதுகின்றோம்.

மேத‌கு பிர‌பாக‌ர‌னின் தாயார் அன்னை பார்வ‌தி அவ‌ர்க‌ள் ம‌லேசியாவில் இரு ந்து ம‌ருத்துவ‌ சிகிச்சை பெற‌ த‌மிழர்க‌ள் இருக்கின்றார்க‌ளே என்ற ந‌மிபிக்கையில் சென்னை வ‌ந்தார். அவ‌ரை த‌மிழ‌க‌ ம‌ண்ணைத் தொட‌ கூட‌ அனும‌திக்காம‌ல் திருப்பி அனுப்பிவைக்க‌ட்டார். இவ்வ‌ள‌வுக்கும் அவ‌ர் முறையாக‌ அங்கு உள்ள‌ இ ந்திய‌ தூத‌ர‌க‌த்தில் விண்ண‌பித்து முறையாக‌  6 மாத‌ த‌ங்கும் விசா பெற்று தான் இங்கு வ‌ந்து உள்ளார். அவ‌ரை திருப்பி அனுப்பிய‌து ம‌த்திய‌ அர‌சா அல்ல‌து அதிகாரிக‌ளின் அதிகார‌போக்கா, இது மாநில‌ அர‌சுக்கு தெரியாம‌ல் ந‌ட‌ந்து இருக்க‌ வாய்ப்பு
இல்லை என்ப‌து ம‌ட்டும் உண்மை. வாய் நிறைய‌? த‌மிழ் த‌மிழ் என்று பேசும் ந‌ம் முத‌ல்வ‌ருக்கு ஒரு த‌மிழ் அன்னைக்கு ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ அனும‌திக்க‌ கூட ம‌ன‌ம் இல்லையா? இல்லை இதிலும் அர‌சிய‌லா? இல்லை த‌மிழ‌னின் புறனா நூற்று வீர‌த்தை காண்பித்த‌ ஒரு மாவீர‌னின் தாய என்ற‌ குருகிய‌ க‌ண்ணோட்டாமா இதில் எது இரு ந்தாம்.

நாம் ஒன்றை புரிந்துகொள்ள‌ வேண்டும். த‌மிழ் இன‌த்தையே அழித்த‌ ஒரு க‌ட்சியின் பிர‌திநிதி
சிவ‌ப்பு க‌ம்ப‌ள‌ வ‌ர‌வேற்போடு இங்கு வ‌ந்து க‌ட்சியை வள‌ர்த்துச் செல்ல‌ முடிகின்ற‌ன‌. ஆனால‌ 7 கோடி த‌மிழ‌ன் இருப்ப‌தாக‌ சொல்ல‌ப்ப‌டும் த‌மிழ‌க‌த்தில் ஒரு தாய் வ‌ ந்து ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ முடிய‌வில்லை என்று சொன்னால் நாம் உண்மையான‌ த‌மிழ‌ர்க‌ளா?

ஒரும‌னித‌ நேய‌ம‌ற்ற மிக‌வும் கீழ்த்த‌ர‌மாண‌ செய‌லை செய்த‌ ம‌த்திய‌, மாநில‌ அரசுக‌ளையும், அதிகாரிக‌ளையும் ம‌னித‌ நேய‌த்தை நேசிக்கும் ஒவ்வொரு ம‌ன‌மும் அசிங்க‌மாக‌வே என்னும் க‌ரும்சாபத்தையே விடும்.

த‌மிழ‌ர்க‌ள் ஏன் இப்ப‌டி ஆனார்க‌ள்…..

ந‌ம் முத‌ல்வ‌ர் க‌லைஞ‌ர் ந‌டையில் சொன்னால் த‌மிழ‌ர்க‌ளுக்கு என்று நீண்ட‌ அர‌சிய‌ல் வ‌ர‌லாறும் ஏன் ப‌ண்பாடும் அதும‌ட்டும‌ல்ல‌ ஒரு தொண்ம‌மும் அதும‌ட்டும‌ல்ல‌ உய‌ரிய‌ நாக‌‌ரிக‌மும் அதும‌ட்டும‌ல்ல‌ சிற‌ந்த‌ விருந்தோம்ப‌லும் கொண்ட‌ ஒரு தொண்மமான‌, ஒரு வாழ்விய‌ல் நெறிகொண்ட‌ ஒரு நாக‌ரிக‌ த‌மிழின‌ம் இன்று எவ்வாறு சென்றுகொண்டிருக்கின்ற‌ன என்று நாம் பார்த்தால் ந‌ம‌க்கு ஒருக‌ன‌ம் விய‌ப்பாக‌ தான் உள்ள‌து.
இடைத்தேர்த‌ல் திருவிழா முடிந்து, இதோ ந‌ம் ப‌ண்பாட்டுத் திருவிழாக்க‌ள் சித்திரைத் திங்க‌ள் தொட‌ங்கி ஆடி வ‌ரை அமர்க்க‌ள‌மாக‌ ந‌ட‌க்கும் ஆடையில்லாம‌ல் வாழ் ந்த‌ கால‌த்தில் கூட‌ ந‌மது இல‌க்கிய‌த்தில் ஆபாச‌மாக திருவிழாக‌ள் ந‌ட‌ ந்தாத‌க‌ ப‌திவு இல்லை ஆனால் இன்று நாக‌ரிக‌ கால‌ம் என்று நாம் ப‌றைசாற்றி கொள்ளும் இந்த‌ கால‌த்தில் இனி ந‌க‌ர‌த்தின் வீதி ம‌ட்டும் அல்லாம‌ல் கிராம‌ங்க‌ளில் கூட‌ இனி ஆபாச‌ ஆட்ட‌ங்க‌ள் நடைபெரும். அதுவும் அறிவிய‌ல் வ‌ள‌ர்ச்சியில் ஏற்ப‌ட்ட‌ ப‌தாகைக‌ளில் (ப்ள‌க்ஸ் போர்டு) சாமி ப‌ட‌ங்க‌ளை பெரிதாக‌ போட்டு அத‌ற்கு முன்பாக‌ க‌வ‌ர்ச்சி ஆட்ட‌ம் ஆடுவ‌தும் அத‌ற்கு ஊர் பெரிய‌வ‌ர்க‌ள் த‌லைமை தாங்குவ‌தும் இனி அசிங்க‌மாக அர‌ங்கேறும். பெரியார் சாமி இல்லை என்று சொன்ன‌ ஒரே கார‌ணத்திற்காக‌, அவ‌ரை த‌மிழ‌ன் இல்லை என்று ஆதிக்க‌ வ‌ர்க்க‌ம் அவ‌ரை த‌மிழர்க‌ளின் ம‌ன‌தில் இருந்து அவரை நீக்க‌ பார்த்து தோல்வி அடைந்து வ‌ருகின்ற‌ன‌ ஆனாலும் அது தொட‌ர்ந்து கொண்டு தான் இருக்கின்றன‌. ஒரு க‌ன்ன‌ட‌ மொழி குடும்ப‌த்தை சேர்ந்த‌வ‌ராக‌ இருந்த‌போதும் இன்று நாம் எழுதுகின்றோமே இந்த‌ அழ‌கான‌ த‌மிழ் மொழியை எழுத்து சீர்திருத்த‌ம் செய்த‌வ‌ர் பெரியார், பெண்ண‌டிமை போக்க‌ அன்றே அன்றே இட‌ஒதுக்கீட கோரிய‌வ‌ர், சொத்துரிமைக்கு பாடுப‌ட்ட‌வ‌ர், த‌லித்துக‌ளுக்கு கோவில் நுழைய‌ அனும‌தி இல்லை என்ற‌தினால் தான் த‌லித்துக்க‌ள் ப‌ட்ட‌ வ‌லியை அவ‌ர் உண‌ர்ந்த‌தினால் தான் க‌ட‌வுளே இல்லை என்றார், இருந்தும் அனைவ‌ரும் அர்ச்ச‌ர் ஆகும் உரிமை வேண்டும் என்றார் இப்ப‌டி அவ‌ர் த‌மிழ‌னை த‌மிழ‌னாக‌ வாழ‌ வைக்க‌ ஒரு சுய‌ம‌ரிய‌தை உள்ள‌வான‌ மாற்ற அவ‌ர் த‌ன் வாழ்நாள் எல்லாம் த‌மிழ‌னுக்காக‌ அர்ப‌ணித்துக்கொண்ட‌ ஒரு மாசில்லா த‌லைவ‌னை அன்று ச‌ரி இன்றும் ச‌ரி த‌மிழ‌ன் இல்லை என்று ப‌ர‌ப்ப‌ ஒரு குருகிய‌ ம‌ன‌ப்பான்மையுட‌ன் செய‌ள்ப‌ட்டுக்கொண்டிருக்கும் ஆதிக்க‌ இந்துக்க‌ளுக்கு இப்ப‌டி ஆபாச‌ ஆட்ட‌ம் ஒரு பொருட்டாக‌ இருக்காது. ‌
கூப்பிடும் தொலைவில் உள்ள‌ ஈழ‌த்தில் ஒரு இனமே அழிக்க‌ப்ப‌ட்ட‌ போதும் அது ப‌ற்றி க‌வ‌லைப்ப‌டாம‌ல் ஏன் என்று கூட‌ கேக்காம‌ல் இரு ந்த‌ ஒரு இழி இன‌ம் என்று நாளைய‌ வ‌ர‌லாற்றில் ப‌டித்து ந‌ம் ச‌ ந்த‌திக‌ள் ந‌ம்மை காறித்துப்ப‌ போகின்றார்க‌ளே என்ற‌ க‌வ‌லை ந‌ம‌க்கு எத்த‌னைப் பேருக்கு வ ந்திருக்கின்ற‌ன‌. ஆசுத்தேரிலாவில் ஒரு சீக்கிய‌ர் கொல்ல‌ப்ப‌ட்ட‌ப்போது இ ந்தியாவின் ப‌ஞ்சாப் மா நில‌மே ப்ற்றி எரி ந்த‌ன‌ ஒரே நாளில் 5000 கோடி ந‌ஷ்ட‌ம் என்று நடுவ‌ன் அர‌சு பெருமையாக‌ அறிவித்த‌து. அதும‌ட்டும‌ல்ல‌ முன்பு பிரான்ஸ் நாட்டில் சீக்கிய‌ர்க‌ள் த‌லையில் க‌ட்டிக்கொள்ளும் த‌லைபாகையை த‌டை செய்த‌ போது ந‌ம் இ ந்திய‌ பிர‌த‌ம‌ர் நேர‌டியாக‌ ம‌யிர் பிர‌ச்ச‌னையில் த‌லையிட்டு முத‌லில் நான் ஒரு சீக்கிய‌ன் பிற‌கு தான் இ ந்திய‌ன் என்று ஆணித்தர‌மாக‌ ப‌திவு செய்தார் ஆனால் ந‌ம் த‌மிழின‌ காவ‌ல‌ர்க‌ள், த‌மிழின‌ த‌லைவ‌ர்கள், த‌மிழுக்காக‌வும், த‌மிழ‌னுக்காவும் வாழ்வ‌தாக‌ பீத்திக்கொள்ப‌வர்க‌ள் எல்லாம் போர‌ட்ட‌ம் ந‌ட‌த்துவ‌தும், அறிக்கை விடுவ‌தும், ம‌னித‌ ச‌ங்கிலி ந‌ட‌த்துவ‌திலும் அதிக‌ப‌ட்ச‌மாக‌ உண்ணாவிரத‌ நாட‌க‌ம் ந‌ட‌த்துவ‌திலும் தான் அக்கரை காட்டினார்களே ஒழிய‌ அங்கு த‌மிழ‌ர்க‌ளே காக்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்தில் செய‌ல் ப‌ட‌வே இல்லை என்ப‌து தான் க‌ச‌ப்பான‌ உண்மை. ஏன் என்றால் ஈழ‌த்த‌மிழ‌னால் இவ‌ர்க‌ளுக்கு ஒரு ப‌ல‌னும் இல்லை அவ‌ர்க‌ள் வாக்க்குப்போட்டு இவ‌ர்க‌ள் ஆட்சியில் அம‌ர‌போவ‌தில்லை என்ற‌ ந‌ம்பிக்கையில் தான் அங்கு உற‌வுக‌ள் செத்து ம‌டிந்த‌ போதும் ஆப‌ச‌ ந‌ட‌ன‌ங்க‌ளை வீடுதோரும் தொலைக்காட்சி வ‌ழியாக‌ ந‌ட‌த்த‌ முடிந்த‌து.
த‌மிழ‌ன் த‌மிழ‌னாக‌ இருந்து இருந்திருந்தால் ஒரு கோடி சிங்க‌ள‌ன் 5 ல‌ட்ச‌ம் த‌மிழ‌னை அழித்த‌ போது 7 கோடித்த‌மிழ‌ன் இருந்தும‌ அர‌சிய‌ல் அசிங்க‌த்தால் அடிமையாய் இருந்து போனான்.இன‌ம் உண‌ர் ந்து ஒரு 50 ல‌ட்ச‌ம் த‌மிழ‌ன் சாலையில் வ‌ந்து இறங்கி போராடி இருந்தால் அங்கு த‌மிழ‌னின‌ம் காக்க‌ப்ப‌ட்டிருக்கும் என்ப‌து க‌ச‌ப்பான‌ உண்மை. ஆனால் நாம் அப்ப‌டி உண‌ர‌ முடியாத‌, செய‌ல் ப‌ட‌ முடிய‌த‌ ஒரு போலி அர‌சியலா‌ல் நாம்  பிண்ண‌ப்ப‌ட்டிருகிறோம், வேறு நாட்டுக்கார‌ணும் பிற‌ மா நில‌த்துக்கார‌ணூம் சே, காஸ்ட்ரோ, ப‌க‌த்சிங், நேத‌ஜி போன்ற‌வ‌ர்க‌ளை ரோல் மாட‌லாக‌ கொண்டு இருக்கும் போது ஒரு தொண்மையான‌ ஒரு நீண்ட‌ , நெடிய‌ வ‌ர‌லாறை கொண்ட‌ ஒரு இன‌ம் மொழி உண‌ர்வு அற்ற‌வ‌ரையும், விஜ‌ய்காந்தையும், ர‌ஜினிக்காந்தையும் அல்ல‌வா த‌லைவானாக‌ கொண்டு இருக்கின்றன‌.  
         
அத‌ன் விளைவு தான் இன்று 500க்கும் 1000க்கு த‌ன் வாக்குக‌ளை ப‌திவு செய்து ஒரு தொண்ம‌மான‌ ஒரு இன‌ம், அசிங்க‌மான‌ ஒரு செய‌லை வ‌ர‌லாற்றில் ப‌திவு செய்து வ‌ருகின்ற‌ன‌.

ம‌லையாளிக‌ளின் அர‌சு ஆக்கிர‌மிப்பு‏

ந‌ண்ப‌ர்க‌ளே ம‌லையாளிகளின் அர‌சு ஆக்கிர‌மிப்பையும் பாருங்க‌ள் இவ‌ர்க‌ளின் (எம்.கே, நார‌ய‌ண‌ன்,சிவ‌ச‌ங்க‌ர் மேன‌ன், விச‌ய் ந‌ம்பியார்) த‌வ‌றான‌ வ‌ழிகாட்ட‌லும், த‌மிழனை ஒழிக்க‌வேண்டும் என்ற‌ குறுகிய‌ எண்ண‌மும் தான் ஈழ‌த்தில் ந‌ம் உற‌வுக‌ள் கொத்து கொத்தாய் சாக‌ கார‌ண‌மாக‌ இருந்த‌வ‌ர்க‌ள். இன்று த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌ர்க‌ளையும் ப‌லி வாங்க‌ புற‌ப்ப‌ட்டுவிட்டார்க‌ள்.
 
இத‌ற்கு மேலும் த‌மிழா நீ மானமும், வெட்க‌மும் இல்லாம‌லும், உண‌ர்வும் இல்லாமலும் இருந்தால் உன்னையும் உன் தேச‌த்தையும் விட்டுவிட்டு அண்ண‌ன் சீமான் சொல்வ‌தைப் போல் நாக்கை புடுங்கிக்கொண்டு சாக‌ வேண்டிய‌து தான்.
 
இதோ கீழே உள்ள‌ க‌ட்டுரையை கொஞ்ச‌ம் பொருமையாக‌ ப‌டித்து பார் த‌மிழா உண்மை நில‌வ‌ர‌ம் உன‌க்கு புரியும்.

 

இலங்கை தமிழர் பிரச்சினையில் நடைபெற்று வந்த காரியங்களைப் பார்த்து,  ப‌ல‌ர் தொடர்ந்து சொல்லி வந்த கருத்தை இப்பொழுது முதல்-அமைச்சரும் உணரத்தொடங்கியிருக்கிறார் என்பதையே அவரது இந்தக் குற்றச்சாட்டு எடுத்துக்காட்டுகிறது. இதில் நமக்கு சந்தேகமே வேண்டாம். இன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது கேரளா தான்.

 
30 மாநிலங்களையும், 3 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட மத்திய அரசின் செயலகங்களா? அல்லது திருவனந்தபுரத்தில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகமா? என்று பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு, இன்றைக்கு டெல்லியில் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் நிரம்பி வழிகிறார்கள்.

 
இந்தியாவா? அல்லது கேரள தேசமா? என்று எண்ணும் அளவுக்கு மலையாள மொழி பேசுகிற கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் மத்திய ஆட்சி நிர்வாகத்தில் மிக முக்கியமான பொறுப்புகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

 
அரசியல் சட்டத்தின்படி நாட்டின் முதல்குடிமகனாக விளங்குபவர் குடியரசு தலைவர் இப்போது குடியரசு தலைவராக இருக்கும் பிரதீபாபட்டிலுக்கு செயலாளராக இருப்பவர் கிறிஷ்டி பெர்னாண்டஸ், பதவியிலிருந்து ஓய்வு பெறும் வயதை தாண்டிய இவருக்கு 4 ஆண்டுகள் பதவி நீடிப்பு கொடுக்கப்பட்டு பிரதீபாபட்டில் பதவியில் இருக்கும் வரையில், இவரும் செயலாளராக பதவியில் நீடிப்பார் என்ற நிலமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.

 
குடியரசு தலைவருக்கு அடுத்ததாக ஆட்சி தலைவராக இருப்பவர் பிரதமர். பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச்செயலாளராக இருப்பவர் டி.கே. நாயர். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று விளக்கத் தேவையில்லை. பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.

 
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராகவும், ஆட்சியை வழி நடத்திச் செல்பவராகவும் விளங்கி வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் செயலாளராக இருப்பவர் வின்சென்ட் ஜார்ஜ். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.

 
மாநிலங்களில் எப்படி தலைமைச் செயலாளர் பதவி இருக்கிறதோ, அதைப் போன்று மத்தியில் இருப்பது அமைச்சரவை செயலாளர் பதவி. இப்போது அமைச்சரவை செயலாளராக இருப்பவர் கே.எம். சந்திரசேகர், இவருக்கு அடுத்தபடியாக உள்துறை செயலாளராக இருப்பவர் சி.கே. பிள்ளை, செல்வாக்கும், அதிகாரமும் மிக்க இவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள்.

 
வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாமேனன் ராவ், தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலாளர் பி.கே.தாமஸ், விவசாயம் மற்றும் கூட்டுறவு துறை செயலாளர் நந்தகுமார், சிவில் விமானப்போக்குவரத்து துறை செயலாளர் மாதவன் நம்பியார், செய்தி ஒலிபரப்பு துறை செயலாளர் ரகுமேனன், நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் ராமச்சந்திரன், ஜவுளி துறை செயலாளர் ரீட்டாமேனன், கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் கங்காதரன், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர், சட்டத்துறை செயலாளர் விசுவநாதன் ஆகியோரும் கேரளாவைச் சேர்ந்த மலையாள மொழி பேசுகிற அதிகாரிகள்.

 
எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் எம்.கே.நாராயணன் நாயர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் மாதவன் நாயர் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

 
நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத்துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர், வேறு மாநிலங்களில் பணியாற்றி, மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.

 
தமிழ்நாட்டிலிருந்தும் 2 அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு போயிருக்கிறார்கள். அந்த இருவருமே கேரளாவை சொந்த மாநிலமாகக் கொண்ட வர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே ஒரு அதிகாரி இப்போது மத்திய அரசில் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

 
இத்தகைய நிலையில் இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம்? என்ற சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான் இன்றைக்கு கேரளாவுக்கு சாதகமாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது.

 
மத்தியில் இணை அமைச்சராக இருக்கும் ஒருவர் மிகத் துணிச்சலாக தமிழக அரசையும், தமிழக முதல்-அமைச்சரையும் மதிக்காமல், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரளாவிற்கு அனுமதி அளிக்கிறார் என்றால், அந்தத் துணிச்சல் அவருக்கு எப்படி வந்தது? மத்தியில் ஆளுகின்ற கூட்டணி ஆட்சியில் முக்கியக் கூட்டணிக்கட்சி ஆட்சி நடத்துகின்ற தமிழகத்திற்கு பாதகமாகவும், எதிர்க்கட்சி ஆட்சி நடக்கிற கேரளத்திற்குச் சாதகமாகவும் முடிவெடுக்கும் துணிச்சலை அவருக்கு கொடுத்தது யார்? அவர் வெறும் பொம்மை தான். அவருக்கு சாவி கொடுத்து செயல்பட வைத்திருப்பவர்கள் யார்? என்பதை துணிந்து அறிவிக்க முதல்வர் முன்வர வேண்டும்.

 
மாநில நலனை காக்க மத்திய அரசுக்கு சவால் விட்டு வெற்றிக் கொடி நாட்டும், துணிவுமிக்கதாக தமிழகம் மாறினாலொழிய முல்லை பெரியாறு அணை பிரச்சினையிலும், இதர நதிநீர் பிரச்சினைகளில் நமது உரிமையை பாதுகாத்திட முடியாது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நெஞ்சுப் பொருக்குதில்லையே……..

ம‌ன‌சாட்சியே இல்லாத‌ த‌மிழ‌ர்க‌ளா நீங்க‌ள், உங்க‌ளால் எப்ப‌டி சிரித்துக்கொண்டிருக்க‌ முடிகிற‌து த‌மிழ‌னை அழித்த‌து ச‌ரியென்று சொல்லி சிரிக்கின்றீர்க‌ளா, உரிமை கேட்ட‌ த‌மிழ‌னை உயிருட‌ன் எரித்த‌து ச‌ரியென்று ர‌க‌சிய‌ம் சொல்லி சிரிக்கின்றீர்க‌ளா, பாவிக‌ளே நீங்க‌ள் எதை சொல்லி சிரிக்கிறீர்க‌ள் சொல்லிவிட்டு சிரியுங்க‌ளே, எங்க‌ள் இன‌த்தையே தான் உங்க‌ள் அர‌சிய‌லில் சிக்க‌ வைத்து சிரிப்பாய் சிரிக்க‌ வைத்துவிட்டீர்க‌ளே, எங்க‌ள் உண‌ர்வுக‌ளை கொன்று உங்க‌ள் குடும்ப‌த்திற்கு துதி பாட‌ வைத்து விட்டீர்க‌ளே அதை சொல்லி எங்க‌ள் இய‌லாமையை எங்க‌ள் இன‌த்தை அழித்த‌வ‌னிட‌ம் சொல்லி சிரிக்கின்றீர்க‌ளா. என் இன‌த்தையே அழித்த‌வ‌னைப் பார்த்து உங்க‌ளால் எப்ப‌டி சிரிக்க‌ முடிகிற‌து.

நாங்க‌ள் இதை எதிர்ப்பார்த்த‌து தான் 10 பேரில் இருவ‌ர் ஒர‌ள‌வு உண்மையை சொல்லுவார் என்று எண்ணியிருந்தோம். ஆனால் அவ‌ரும் சிறுத்தையாக‌ சென்று சிங்க‌த்திட‌ம் அல்ல‌வா அடிப‌ணிந்து விட்டார். ட‌க்ல‌ஸிட‌ம் ந‌ட்பு பார‌ட்டிய‌ல்ல‌வா ந‌ய‌வ‌ஞ்சக‌ம் செய்துவிட்டார்.

த‌மிழ‌க‌த்தின் ப‌ட்டித்தொட்டியெல்லாம் ஈழ‌த் த‌மிழ் குழ‌ந்தைக‌ளின் துய‌ர‌ம் சொல்லி க‌ண்ணீர் விட்ட‌ க‌னிமொழித் தாயே. உங்க‌ளைப் போன்ற‌ எம் குடும்ப‌ப் பெண்களின் வாழ்க்கையை சீர‌ழித்த‌ ஒரு பாவியிட‌ம் எப்ப‌டி  உங்க‌ளால் சிரிக்க‌ முடிகின்ற‌து. நாங்க‌ள் உங்க‌ளைக் கூட‌ ந‌ம்பி இருந்தோம்.
ஓர‌ள‌வு உண்மையைச் சொல்வீர்க‌ள் என்று. நீங்க‌ளும் சிக‌ப்பு க‌ம்ப‌ள‌த்திற்கு அடிமையாகி விட்டீர்க‌ளே.

எம் ம‌க்க‌ளின் துய‌ர‌த்தைப் பார்வையிட‌ நீங்க‌ள் செல்ல‌ வில்லை எம் ம‌க்களை ராச‌ப‌க்சே ந‌ல்ல‌ முறையில் ந‌ட‌த்துகிறார் என்று ச‌ர்வ‌தேச‌த்துக்கு எடுத்துச்சொல்ல‌ இல‌ங்கை அர‌சால் விலைக்கொடுத்து வாங்க‌ப்ப‌ட்டு சென்று வ‌ந்த‌ ஒரு போலி தூதுக்குழு என்ற‌ உண்மை ஒரு நாள் வெளிச்ச‌த்திற்கு வ‌ரும்.

இந்த‌ ப‌ட‌த்தை பார்க்கும் போது த‌மிழ‌னாய் நான் வெட்கி கூனிக் குறுகிப்போகின்றேன்.
பொண்னாடைப் போர்த்தி இப்ப‌டி ம்கிழ்ச்சி அடைகின்றீக‌ளே நீங்க‌ள் உண்மையான‌ த‌மிழ‌ர்க‌ளா?ADA PAVIKALA1ADA PAVIKALA3ADA PAVIKALAADA PAVIKALA2

ஈழ உண்மை நில‌வ‌ர‌த்தை சொல்லுமா? உண்மை நில‌வ‌ர‌ம் அறிய‌ சென்ற‌ குழு

வவுனியா அகதிகள் முகாமில் தங்கி துன்புற்று மனித வதைக்கு உட்பட்டுள்ள  வன்னி மக்களின் நிலைமையை நேரில் கண்டறிவதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்தியத் தூதுக்குழு ஐந்து நாள் பயணமாக நேற்று மாலை கொழும்புக்கு சென்று உள்ள‌ன‌ர்.

இதில் உள்ள‌ ஒரு உண்மை என்ன‌வென்றால் இதில் உள்ள‌ எல்லோருமே ஆளும்க‌ட்சிக்கார‌ர்க‌ள் ம‌ற்றும் ஆளும்க‌ட்சியை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் சென்று இல‌ங்கையில் உள்ள‌ த‌மிழ் உற‌வுக‌ளின் உண்மை நிலையை எப்ப‌டி உல‌கிற்கு தெரிவிப்பார்க‌ள் என்ற‌ ஐய‌ம் கீழே உள்ள‌வ‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளைப் பார்த்தாலே உங்க‌ளுக்கு தெரிய‌வ‌ரும்.

 டி.ஆர்.பாலு - எப்ப‌டியும் க‌லைஞ‌ர் நெஞ்சில் இட‌ம் பிடித்து மீண்டும் ந‌டுவ‌ன் அர‌சில் இட‌ம் பிடிக்க‌ உழைத்து வ‌ருப‌வ‌ர். இவ‌ர் எப்ப‌டி க‌லைஞ‌ர் சொல்ல‌ச் சொல்வ‌தைத் த‌விர்த்து உண்மை நில‌வ‌ர‌த்தைச் சொல்லுவார்.

கனிமொழி -  க‌லைஞ‌ரின் ம‌க‌ள். உண்மையைச் சொல்ல‌ ம‌ன‌து நினைத்தாலும் அப்பாவிற்காக‌ ம‌ன‌தை க‌ல்லாக்கி கொள்வார்.

மு.க.அழகிரி - க‌லைஞ‌ரின் ம‌க‌ன். எதுவும் சொல்ல‌ வேண்டிய‌தில்லை. 

டி.கே.எஸ். இளங்கோவன் – சொல்ல‌வே வேண்டாம் சீட்டு வாங்க‌வே சிர‌ம‌ப‌ட்ட‌வ‌ர் க‌லைஞ‌ரின் சொல்லுக்கு ம‌று சொல்லு உண்டோ…

ஏ.கே.எஸ். விஜயன் -   துணை அமைச்ச‌ராக‌ வேண்டிய‌ வாய்ப்பு த‌வ‌றிப்போன‌து. ம‌னசு உறுத்தினாலும் வாய் வ‌ராது உண்மைய‌ச் சொல்ல‌…

 ஹெலன் டேவிட்ச‌ன் -  புதுமுக‌ம் க‌ட்சியில் நீடிக்க‌ வேண்டும். நீங்க‌ளே புரிந்துக்கொள்ளுங்க‌ள்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி.சித்தன், ஹாரூன் ரசீத் -  த‌மிழ‌னை அழித்த‌தை ச‌ரியென்று சொன்ன‌ க‌ட்சியை சேர்ந்த‌வ‌ர்க‌ள் எள‌வு
வீட்டுக்குச் செல்ல‌ முடியாம‌ல் குற்ற‌ உண‌ர்வே இல்லாம‌ல் க‌ருமாதிக்கு செல்ப‌வ‌ர்க‌ள்.

 தொல்.திருமாவளவன் – ல‌ண்ட‌ன் த‌மிழ‌னுக்கும் ப‌தில் சொல்ல‌ முடியாம‌ல், துரோகி ப‌ட்ட‌த்துட‌ன் ஓடிவ்ந்த‌வ‌ர். த‌மிழ‌க‌ த‌மிழ‌னுக்கும் ப‌தில் சொல்ல‌ முடியாம‌ல் த‌விப்ப‌வ‌ர். எந்த க‌ட்சி த‌மிழ‌னை அழித்த‌து என்று குற்றம் சாட்டினாரோ எந்த‌ க‌ட்சியை ஒழிக்க‌ வேண்டும் என்று ச‌ப‌த‌ம் கொண்ட‌ரோ அதே க‌ட்சியுட‌ன் கூட்ட‌ணி வைத்து ப‌த‌வி சுக‌ம் க‌ண்ட‌வ‌ர். த‌மிழ‌க‌த்தில் கொள்கையாள‌ராக‌ வ‌ல‌ம் வ‌ந்த‌வ‌ர் இப்போது க‌லைஞ‌ருக்காக‌ ச‌ற்று த‌டுமாறுப‌வ‌ர். இவ‌ரிட‌ம் ம‌ட்டும் கொஞ்ச‌ம் உண்மையை எதிர்பார்க்க‌லாம் க‌லைஞ‌ர் எதுவும் சொல்ல‌ம‌ல் இருந்தால்

இப்போது உங்க‌ளுக்கு உண்மை புரிந்து இருக்கும். இவ‌ர்க‌ள் எப்ப‌டி த‌மிழ‌க‌ அர‌சுக்கும், இந்திய‌ அர‌சுக்கும் ஆத‌ர‌வாக‌ இல்லாம‌ல் எப்ப‌டி உண்மை நில‌வ‌ர‌த்தை சொல்லிவிட‌ போகிறார்க‌ள்.

இவ‌ர்க‌ள் யார் யாரை ச‌ந்தித்தார்க‌ள் அவ‌ர்க‌ள் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என்ப‌தை இவ‌ர்க‌ள் ச‌ந்திக்க‌ ச‌ந்திக்க‌ தெளிவாக‌ பார்ப்போம்.

இவ‌ர்க‌ளின் ந‌கைச்சுவையான‌ ச‌ந்திப்பு ந‌ம்ம‌ ட‌க்ள‌ஸ்.

விடுத‌லைப் பாவ‌ல‌ர் அறிவும‌தி குவைத் வ‌ருகை

arivumathiariari2ari3ari4

அடுத்த பக்கம் »



Follow

Get every new post delivered to your Inbox.